உள்ளூர் செய்திகள்

காத்தருள்வாள் காமாட்சி

மாங்கல்ய பலம் பெருக காரடையான் நோன்பன்று படியுங்கள். மாங்காட்டில் வாழ்பவளே போற்றிமகிமையுள்ள தெய்வம் நீயே போற்றிபஞ்சாக்நி மத்தியிலே போற்றிபரமனுக்குத் தவமிருந்த போற்றிகாஞ்சியிலே கோயில்கொண்ட போற்றிகல்யாணக் கோலம்பூண்டாய் போற்றிசங்கரரும் பூஜை செய்த போற்றிசக்கரத்தில் உறைந்திட்ட போற்றிஅர்த்தமேரு அலங்கரிக்கும் போற்றிஅண்டி னோரைக் காக்கின்ற போற்றிகாஞ்சிமுனி சேவிக்கும் போற்றிகண்கண்ட தெய்வமம்மா போற்றிபஞ்சலோக வடிவினியே போற்றிபக்தர் துயர் தீர்த்திடுவாய் போற்றிஆடிப்பூர தினத்தினிலே போற்றிஆனந்தமாய் வீற்றிருப்பாய் போற்றிபங்குனிநல் உத்திரத்தில் போற்றிபரமனைநீ மணங்கொண்டாய் போற்றிகரும்போடு காட்சிதரும் போற்றிகருணையுள்ள தெய்வம் நீயே போற்றிகிளியோடு காட்சிதரும் போற்றிகிருபைநீயும் செய்திடுவாய் போற்றிசாந்தமாக காட்சி தரும் போற்றிசந்தானம் தந்திடுவாய் போற்றிசூதவனம் கோவில் கொண்ட போற்றிசூதுகளை அகற்றிடுவாய் போற்றிஇடப்புறத்தில் அமர்ந்திட்ட போற்றிஇன்பமெல்லாம் தந்திடுவாய் போற்றிஆறுவாரப் பூஜை ஏற்பாய் போற்றிஆதி போற்றியும் நீயே போற்றிமுதல்வாரப் பூஜையிலே போற்றிநம்குறைகள் அறிந்திடுவாள் போற்றிஇரண்டாம்வாரப் பூஜையிலே போற்றிஇன்னல்களைப் போக்கிடுவாள் போற்றிமூன்றாம்வாரப் பூஜையிலே போற்றிமூன்றுவரம் தந்திடுவாள் போற்றிநான்காம் வாரப் பூஜையிலே போற்றிநலன்கள்பல தந்திடுவாள் போற்றிஐந்தாம்வாரப் பூஜையிலே போற்றிஐயங்களைப் போக்கிடுவாள் போற்றிஆறாம்வாரப் பூஜையிலே போற்றிநினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் போற்றிமாவடியில் வசித்தவளே போற்றிமனக்குறைகள் தீர்த்திடுவாள் போற்றிதாம்பூலம் ஏற்றிடுவாள் போற்றிதாயாகக் காத்திடுவாள் போற்றிகற்பூரம் ஏற்றிடுவேன் போற்றிகலிதெய்வம் நீதானே போற்றிபுஷ்பமாலை ஏற்றிடுவாள் போற்றிபுண்ணியங்கள் தந்திடுவாள் போற்றிகாய்ச்சிட்ட பாலுடனே போற்றிகற்கண்டும் ஏற்றிடுவாள் போற்றிஏலக்காய் தேனுடனே போற்றிஏழைகளின் துயர் தீர்ப்பாய் போற்றிஎலுமிச்சம் பழம் ஏற்பாள் போற்றிஎம்குறைகள் தீர்த்திடுவாள் போற்றிமாலையாக காட்சிதரும் போற்றிபாசமுடன் காத்திடுவாள் போற்றிமங்களமாய் காட்சி தரும் போற்றிமங்களமாய் வாழவைப்பாள் போற்றிஉத்யோகம் தந்திடுவாள் போற்றிஉன்னடியே சரணமம்மா போற்றிஅன்னை உனை வேண்டி நின்றேன் போற்றிஆதரிப்பாய் என்னையும் நீ போற்றிமாங்கல்யம் தந்திடுவாள் போற்றிமக்களையும் காத்திடுவாள் போற்றிமணாளனைத் தந்திடுவாள் போற்றிமழலைகளும் தந்திடுவாள் போற்றிதுாளிகளை ஏற்றிடுவாள் போற்றிதுன்பங்களைத் துடைத்திடுவாள் போற்றிவெற்றிகளைத் தந்திடுவாள் போற்றிவேதனைகள் போக்கிடுவாள் போற்றிவேழமுகம் நாயகன் தாய் போற்றிவேல்முருகன் அன்னையும் நீ போற்றிகுருநாதர் காட்டிட்ட போற்றிகுவலயத்தோர் கொண்டாடும் போற்றிஅகிலாண்ட நாயகியே போற்றிஅன்பர்குறை தீர்த்திடுவாள் போற்றிஆவின்பால் குடித்தவளே போற்றிஆனந்தம் தந்திடுவாள் போற்றிசிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் போற்றிசீக்கிரமே அருள்தருவாய் போற்றிகெஞ்சுகிறேன் உன்னையம்மா போற்றிகீர்த்தியுடன் வாழவைப்பாய் போற்றிகரம்கூப்பி வணங்குகிறேன் போற்றிவரம் அனைத்தும் தந்திடுவாய் போற்றிநினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் போற்றிநீதிகளைத் தந்திடுவாள் போற்றிவறுமைகளை ஓட்டிடுவாள் போற்றிவாழ்வுதந்து காத்திடுவாள் போற்றிஅர்ச்சனைகள் ஏற்றிடுவாள் போற்றிஅகத்தினிலே குடியிருப்பாள் போற்றிகுழந்தை நானும் மனம் மகிழ்விப்பாய் போற்றிகுமரனுடன் காட்சி தாராய் போற்றிஅன்னை தந்தை தெய்வம் நீயே போற்றிஅருள்வடிவாம் குருநீயே போற்றிமடிசாரில் காட்சிதருபவளே போற்றிமனவினைகள் தீர்த்திடுவாள் போற்றிகடும்தபசு புரிந்திட்ட போற்றிகவலைகளைக் களைந்திடுவாள் போற்றிகாமகோடி ஈஸ்வரியே போற்றிகாத்திருந்து வரமளிப்பாய் போற்றிகாஞ்சிமுனி வேண்டிநிற்கும் போற்றிகாலமெல்லாம் காத்தருள்வாய் போற்றி