உள்ளூர் செய்திகள்

நவராத்திரி நாயகி

தட்சிணாயன புண்ணிய காலமான புரட்டாசி தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். இந்த காலத்தில் அம்பிகைக்குரிய நவராத்திரி கொண்டாடப்படும். அந்த நாட்களில் தினமும் அம்பிகை ஒரு கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த விரதமிருக்கும் பெண்கள் வழிபடும் விதம், படைக்க வேண்டிய நைவேத்யம், வழிபாட்டின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.முதல் நாள்அம்பிகை: மகேஸ்வரி, -அசுரர்களான மது, கைடபர்களை வதம் செய்தவள்பூஜை : 2 வயது சிறுமியை குமாரியாக பாவித்து வணங்குதல்.திதி : பிரதமைகோலம் : அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக்கோலம்பூக்கள்: மல்லிகை, செவ்வரளி, வில்வம்நைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம்,தயிர் சாதம்,மொச்சை, பருப்பு வடைவழிபாட்டின் பலன்: செல்வம் பெருகும், ஆயுள் அதிகரிக்கும்.இரண்டாம் நாள்அம்பிகை: ராஜராஜேஸ்வரி,- மகிஷாசுரனை வதம் செய்தவள்பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்திதி : துவிதியை கோலம்: கோதுமை மாக்கோலம்பூக்கள்: முல்லை, துளசி, கொன்றை, சாமந்தி, சம்பங்கிநைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரைவழிபாட்டின் பலன்: நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்.மூன்றாம் நாள்அம்பிகை : வராகி, -பன்றி முகம் கொண்டவள்பூஜை: 4 வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குதல் திதி : திருதியைகோலம்: மலர்க்கோலம்பூக்கள்: செண்பகம், குங்கும அர்ச்சனைநைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்வழிபாட்டின் பலன்: குறையில்லாத வாழ்வுநான்காம் நாள்அம்பிகை : மகாலட்சுமி, -சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்பூஜை : 5 வயது சிறுமியை ரோகிணியாக பூஜித்தல்திதி: சதுர்த்திகோலம்: அட்சதை கோலம்பூக்கள்: செந்தாமரை, ரோஜாநைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயாசம், பட்டாணி சுண்டல், கல்கண்டு சாதம்.வழிபாட்டின் பலன்: கடன் தொல்லை தீரும்ஐந்தாம் நாள்அம்பிகை: மோகினி,- சும்ப, நிசும்பர்களை வதம் செய்தவள்பூஜை: 6 வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்திதி: பஞ்சமிகோலம்: கடலை மாவு கோலம்பூக்கள்: கதம்பம், மரிக்கொழுந்துநைவேத்யம்: பால் சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்வழிபாட்டின் பலன்: விருப்பம் நிறைவேறும்ஆறாம் நாள்அம்பிகை: சண்டிகா தேவி,- சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருப்பவள்பூஜை: 7 வயது சிறுமியை காளிகாம்பாளாக எண்ணி வழிபடுதல்திதி: சஷ்டிகோலம்: கடலை மாவு கோலம்பூக்கள்: விபூதிப்பச்சை, செம்பருத்தி, சம்பங்கிநைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல், வழிபாட்டின் பலன்: கவலை தீரும், வழக்கில் வெற்றி கிடைக்கும்ஏழாம் நாள்அம்பிகை: சாம்பவி துர்கை, -பொற்பீடத்தில் அமர்ந்திருப்பவள்பூஜை: 8 வயது சிறுமியை பிராஹ்மியாக நினைத்து வழிபடுதல்திதி: சப்தமிகோலம்: மலர்க்கோலம்பூக்கள்: மல்லிகை, முல்லை, தும்பை, தாழம்பூநைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டுவழிபாட்டின் பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்எட்டாம் நாள்அம்பிகை: நரசிம்ம தாரிணி, - ரக்த பீஜனை வதம் செய்தவள்பூஜை: 9 வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்திதி: அஷ்டமிகோலம்: தாமரை மலர்க்கோலம்பூக்கள்: வெண்தாமரை, சம்பங்கி, நந்தியாவட்டைநைவேத்யம்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சைவழிபாட்டின் பலன்: நல்லெண்ணம் உண்டாகும்ஒன்பதாம் நாள்அம்பிகை: பரமேஸ்வரி,- திரிசூலத்துடன் இருப்பவள்பூஜை: 10 வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்திதி: நவமிகோலம்: வாசனைப் பொடிக்கோலம்பூக்கள்: துளசி, வெள்ளை நிறப்பூக்கள், தாமரை, மரிக்கொழுந்துநைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் பாயாசம், கேசரி, எள் உருண்டைவழிபாட்டின் பலன்: சந்ததியினர் நல்வாழ்வு பெறுதல்பத்தாம் நாள்அம்பிகை: விஜயா, பார்வதியின் ஸ்துால வடிவம் திதி: தசமிகோலம்: மலர்க்கோலம்பூக்கள்: பலவிதமான மலர்கள்நைவேத்யம்: பால் பாயாசம், இனிப்பு வகைகள், சித்ரான்னம்வழிபாட்டின் பலன்: சகல சவுபாக்கியம்இந்நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள், பழவகைகள், ரவிக்கைத்துணி இவற்றைத் தானமாகக் கொடுத்தால் தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.