இந்த வாரம் என்ன
நவ.14 ஐப்பசி 28: திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் திருக்கல்யாணம். திருநெல்வேலி காந்திமதி அம்மன் தபசுக்காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. துாத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லுார் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மன் வீதியுலா. திருத்தணி முருகன் கிளி வாகனம். நவ.15 ஐப்பசி 29: ஏகாதசி விரதம். மயிலாடுதுறை மாயூரநாதர் தேர். சங்கரன்கோவில் கோமதி அம்மன், துாத்துக்குடி பாகம்பிரியாள், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், வீரவநல்லுார் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மன், பத்தமடை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். திருநெல்வேலி நெல்லையப்பர் கம்பையாற்றில் கதிர்குளித்தல் காட்சி. கடையம் விஸ்வநாதர் திருக்கல்யாணம். நவ.16 ஐப்பசி 30: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம். திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் தேர். உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்தி புறப்பாடு. இன்று கண்ணுாறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று. நவ.17 கார்த்திகை 1: பிரதோஷம். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் சிவன் சங்காபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கரிநாள். நவ.18 கார்த்திகை 2: மாதசிவராத்திரி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம். சுவாமிமலை முருகனுக்கு தங்கப்பூமாலை சூடியருளல். நவ.19 கார்த்திகை 3: அமாவாசை விரதம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். வீரவநல்லுார் மரகதாம்பிகை ரிஷப சேவை. நவ.20 கார்த்திகை 4: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.