தெரிந்து கொள்வோமா...
* பைரவருக்கு பிடித்தமானது சந்தனக்காப்பு. இதில் புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்துாரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரத்தை சேர்ப்பர். * காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும். * பைரவருக்கு சிவப்புத் துணியில் 9 மிளகை ஒரு முடிச்சிட்டு நல்லெண்ணெய் விட்டு தீபமேற்ற பணபிரச்னை தீரும். * தாமரை, வில்வம், தும்பை, சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது சிறப்பு. செவ்வரளி, மஞ்சள், செவ்வந்தி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. மல்லிகையைத் தவிர்க்க வேண்டும். * சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், தேன், செவ்வாழை, அவல் பாயசம், உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், பழவகைகள் வைத்து வழிபடுவது சிறப்பு.* செல்வத்தின் அதிபதி சொர்ண ஆகர்ஷண பைரவர். இவருடைய இடது கையில் அட்சய பாத்திரம் இருக்கும். * காசியின் காவல் தெய்வமான பைரவருக்கு பூஜை செய்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜை நடக்கும். * காசிக்கு செல்பவர்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரை சென்ற பலன் கிடைக்கும்.