இந்த வாரம் என்ன
ஜன.17 தை 4: சங்கடஹர சதுர்த்தி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கபாவாடை தரிசனம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் கோயிலில் இராப்பத்து உற்ஸவ சேவை. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு. திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம். ஜன.18 தை 5: தியாகபிரம்ம ஆராதனை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருவாய்மொழி உற்ஸவசேவை. ஜன.19 தை 6: முகூர்த்த நாள். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சண்டேஸ்வர நாயனார் குருபூஜை. ஜன.20 தை 7: முகூர்த்த நாள். மதுரை செல்லத்தம்மன் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். கூரத்தாழ்வார் திருநட்சத்திரம். ஜன.21 தை 8: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். அஹோபிலமடம் 15வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஜன.22 தை 9: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். ஜன.23 தை 10: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு. திருநீலகண்ட நாயனார், தாயுமானவ அடிகள் குருபூஜை.