இந்த வாரம் என்ன
ஏப்.18 சித்திரை 5: முகூர்த்த நாள். திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை. சென்னை சென்னகேசவப் பெருமாள் சூர்ணாபிஷேகம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சமயபுரம் மாரியம்மன் தெப்பம். ஏப்.19 சித்திரை 6: சென்னை சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தேர். வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அலங்கார திருமஞ்சனம். கரிநாள். ஏப்.20 சித்திரை 7: செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் உற்ஸவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். ஏப்.21 சித்திரை 8: திருவோண விரதம். நடராஜர் அபிஷேகம். ஸ்ரீரங்கம் நம்பெருமான் கருட வாகனத்தில் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் புறப்பாடு. ஏப்.22 சித்திரை 9: சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம். ஏப்.23 சித்திரை 10: முகூர்த்த நாள். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். இன்று காலை 8:54 - 9:30 வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை.ஏப்.24 சித்திரை 11: ஏகாதசி விரதம். அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.