கேளுங்க சொல்கிறோம்
கே.வனஜா, திரிலோக்புரம், டில்லி: கோயில் சுவரில் காவி, வெள்ளை எதற்கு?கடவுள் இருப்பிடம் - காவி கடவுளின் அருள் - வெள்ளை******ஆர்.பிரபாகர், மாகடி, பெங்களூரு: அர்ச்சனை தேங்காய் அழுகி இருந்தது. பரிகாரம் உண்டா... பயம் வேண்டாம். புதிய தேங்காயை பயன்படுத்தலாம். ******வி.வசந்த், கல்லல், சிவகங்கை: இடது காலில் கருப்புக்கயிறு கட்டுவது ஏன்? திருஷ்டி, செய்வினை தோஷம் தீர.*********எம்.சிந்து, வடதிருமுல்லைவாயில், திருவள்ளூர்: பக்தி, பயபக்தி - எது தேவை?பக்திக்கு பயம் வேண்டாம். ஆனால் தவறு செய்பவர்கள் பயபக்தியாக இருப்பர். **********ஆர்.கமலி, வீரபாண்டி, தேனி: வெள்ளி நவரத்தின மோதிரம் அணியலாமா...அணியலாம். **********எல்.நிவேதா, மானுார், திருநெல்வேலி: மஞ்சள் கயிறை மணப்பெண் எப்போது மாற்றலாம்?திருமணம் முடிந்த 30 நாளுக்கு பிறகு நல்ல நாளில் மாற்றலாம். *******எம்.அகல்யா, அலகுமலை, திருப்பூர்: வில்வ அர்ச்சனைக்கு ஏற்ற நாள்...திங்கள் கிழமை. *******ஆர்.ரவீந்திரன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி: நேர்த்திக்கடன் செலுத்த ஏற்ற நேரம்... மதியம் கோயிலின் நடை சாத்துவதற்கு முன்பு... *********வி.மனோஜ், வில்லியனுார், புதுச்சேரி: திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. என்ன செய்யலாம்?கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பனை தரிசியுங்கள்.