உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* வீட்டிலுள்ள கதவு, ஜன்னல்களை மூடலாம். ஆனால் கடவுளின் கண்களாகிய ஜன்னல்களை மூட முடியாது. * தாமிரத்திற்கு காந்த சக்தி இருப்பதால் அதில் கடவுள் சிலைகளை உருவாக்குகிறோம். * கடவுளுக்கு பச்சிலையும், பசுவுக்கு பழமும் கொடுத்தால் பாவம் போகும். * உயிர்கள் மேன்மை பெற வேண்டும் என்றே கடவுள் அவ்வப்போது மண்ணில் அவதரிக்கிறார். * காலம் தவறி விதைத்தால் பயிர் முளைக்காது. ஆனால் ஆசையை எந்த வயதில் விதைத்தாலும் பிறவி என்னும் பயிர் முளைக்கும். எனவே பேராசை வேண்டாம். * ஞானிகளுக்கு கபாலத்தின் (தலை உச்சி) வழியாக உயிர் வெளியேறும்.* பாவம் செய்த உயிர்கள் இருள் வழியாகவும், புண்ணியம் செய்த உயிர்கள் ஒளி வழியாகவும் மேலுலகத்திற்கு செல்லும்.