உள்ளூர் செய்திகள்

கண் நிறைந்த கணவனை தரும் காத்யாயனி

ஓம் அகக்கண் திறப்பாய் போற்றிஓம் அகத்தினுள் அமர்ந்தாய் போற்றிஓம் அகிலத்து மக்களின் தாயே போற்றிஓம் அகிலமே உன்னில் அடக்கம் போற்றிஓம் அசைவின்றி தவம் புரிபவளே போற்றிஓம் அடியாரை ஆட்கொள்வாய் போற்றிஓம் அருட்காட்சி தரும் அம்மையே போற்றிஓம் அருந்தொண்டு புரிபவளே போற்றிஓம் அருள் தரும் அன்னையே போற்றிஓம் அல்லல் நீக்கி அருள்வாய் போற்றிஓம் அழகிய விழிகள் உைடயவளே போற்றிஓம் அறவழியில் வாழ்விப்பவளே போற்றிஓம் அன்னைக்குள் உயிரானவளே போற்றிஓம் அன்னையாக வரம் தருபவளே போற்றிஓம் அன்பின் வடிவமே போற்றிஓம் ஆக்கம் ஊக்கம் தருவாய் போற்றிஓம் ஆசி தரும் அன்னையே போற்றிஓம் ஆடியில் அருளுமம்மா போற்றிஓம் ஆடிவரும் தேரில் வருபவளே போற்றிஓம் ஆடும் மனதை அடக்குவாய் போற்றிஓம் ஆதியில் உதித்த ஜோதியே போற்றிஓம் ஆலயம் தோறும் அமர்வாய் போற்றிஓம் இஷ்ட தெய்வமானவளே போற்றிஓம் இதயத்தில் நிறைபவளே போற்றிஓம் இதயத்தை இயக்குபவளே போற்றிஓம் இமயத்தின் சிகரமே போற்றிஓம் இருள் நீக்கி ஒளி தருபவளே போற்றிஓம் இல்லம் மகிழ அருள்பவளே போற்றிஓம் இல்லை என சொல்லாதவளே போற்றிஓம் இல்லயிருளை நீக்குபவளே போற்றிஓம் இலக்கணமாய் இருப்பவளே போற்றிஓம் இன்ப வாழ்வே போற்றிஓம் இன்பத்தின் சுவையே போற்றிஓம் ஈசனுக்கு இணையானவளே போற்றிஓம் ஈரேழு உலகிற்கும் தாயே போற்றிஓம் ஈர மனம் பெற்றவளே போற்றிஓம் உடல் நலம் தருவாய் போற்றிஓம் உடற்பிணி நீக்குவாய் போற்றிஓம் உடம்பினுள் ஒளிரும் ஒளியே போற்றிஓம் உண்மையின் பிறப்பிடமே போற்றிஓம் உயிர் தரும் அன்னையே போற்றிஓம் உருகும் பாவைக்கு அருள்பவளே போற்றிஓம் உருகுபவருக்கு கரு தருவாய் போற்றிஓம் உலகத்தின் ஒளியே போற்றிஓம் உள்ளத்தின் சுடரே போற்றிஓம் உறுதியான மனம் தருவாய் போற்றிஓம் உறுதுணையாய் இருப்பாய் போற்றிஓம் உன்னை சரணடைந்தேன் போற்றிஓம் ஊக்கமளிக்கும் சக்தியே போற்றிஓம் ஊர் காக்கும் தேவியே போற்றிஓம் ஊர் ஒற்றுமையை காப்பாய் போற்றிஓம் ஊராரை காக்கும் உமையே போற்றி ஓம் எங்கள் உயிர்நாடியே போற்றிஓம் எங்கள் மனதில் உறைபவளே போற்றிஓம் எங்கள் குறை நீக்குபவளே போற்றிஓம் எங்கும் நிறைந்த ஒளியே போற்றிஓம் எங்களின் அச்சாணியே போற்றிஓம் எங்கள் வாழ்வின் ஒளியே போற்றிஓம் எட்டு திசைக்குரியவளே போற்றிஓம் எமனை உதைத்தவளே போற்றிஓம் எல்லாம் அறிந்தவளே போற்றிஓம் எல்லாம் ஆனவளே போற்றிஓம் என் சிந்தை நிறைபவளே போற்றிஓம் என்னுள் விளங்குபவளே போற்றிஓம் ஏக்கம் தீர்ப்பவளே போற்றிஓம் ஏகன் துணையே போற்றிஓம் ஏழையைக் காப்பாய் போற்றிஒம் ஐங்கரனின் அன்னையே போற்றிஓம் ஒரு அயனத்திற்குள் திருமணமாலை தருவாய் போற்றிஓம் ஒருநாள் தரிசனம் தருவாய் போற்றிஓம் ஒரு நாளும் மறவாத வரமே போற்றிஓம் ஒருமையாக நினைக்கச் செய்வாய் போற்றிஓம் ஒற்றுமையின் பேரின்பமே போற்றிஓம் ஓங்காரமான சக்தியே போற்றிஓம் ஓரிடத்தில் தவமியற்ற அருள்வாய் போற்றிஓம் ஒளவைக்கருளிய அழகனின் தாயே போற்றிஓம் கருணை மிக்க தாயே போற்றிஓம் கருணை வாழ்வின் கதிரே போற்றிஓம் கருவிற்கு உயிரூட்டும் தாயே போற்றிஓம் கருவில் உருவாகும் திருவே போற்றிஓம் கரு காக்கும் காத்யாயனி போற்றிஓம் கலியுக கருணை தெய்வமே போற்றிஓம் காட்சிக்கினிய வடிவே போற்றிஓம் காத்யாயனி முனிவர் பீஜமே போற்றிஓம் கார்த்திகேயனின் தாயே போற்றிஓம் கார்த்திகை தீப ஒளியே போற்றிஓம் கீர்த்தி தரும் நிதியே போற்றிஓம் குழந்தை வரம் தருபவளே போற்றிஓம் குலதெய்வமாக காப்பாய் போற்றிஓம் குற்றமில்லா வாழ்வே போற்றிஓம் கோடி வரம் தருபவளே போற்றிஓம் கோல விழி கோமளமே போற்றிஓம் சேத்தலை அமர்ந்தாய் போற்றிஓம் புகழோடு வாழ வைப்பாய் போற்றிஓம் புன்முறுவல் பூத்தவளே போற்றிஓம் பூரணையின் பூரிப்பே போற்றிஓம் தரணியின் தவக்கொழுந்தே போற்றிஓம் தாயாகி கருவை காப்பவளே போற்றிஓம் தெய்வ சேக்கிழார் தலத்திருவே போற்றிஓம் தென்குன்றத்துார் அருளே போற்றிஓம் தேவர்கள் போற்றும் தேவி போற்றிஓம் தோன்றத்துணையே போற்றிஓம் நாராயணின் சோதரியே போற்றிஓம் நாடு செழிக்க செய்பவளே போற்றிஓம் மறைக்கு எட்டாத மங்கலமே போற்றிஓம் மாசற்ற மனதின் மகிழ்ச்சியே போற்றி ஓம் வாழ்வில் வளம் தருபவளே போற்றிஓம் ஸ்ரீகாத்யாயனி தாயே போற்றி போற்றி