உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனேதென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியேஎன்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ(குலசேகராழ்வார் பாடிய பாசுரம்)பொருள்: நிலையான புகழ் மிக்க கோசலையின் மணிவயிற்றில் அவதரித்தவனே! தென்திசையிலுள்ள இலங்கை மன்னன் ராவணனின் தலைகளை வீழ்த்தியவனே! சிவந்த பொன்னாலான, பெரிய கோட்டைகள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் அருள்புரியும் கரியமாணிக்கமே! அமுதமாக எனக்கு இனிமை சேர்ப்பவனே! ரகு குலத்தில் அவதரித்தவனே! துயில்வாயாக.