உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்தஅக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.பொருள்: தன்னிகர் இல்லாதவனே! வேதப் பொருளாய் விரிந்து விளக்காக என் மனதிற்குள் புகுந்தவனே! பெருமை மிக்க நரசிம்மனே! பொலிவுடன் காட்சி தரும் பொன்மலையே! தகுதி மிக்கவனே! திருக்கடிகை என்னும் திருத்தலத்தில் மலை உச்சியில் வீற்றிருக்கும் கனியே! உன்னைத் தரிசித்ததால் நற்கதி அடைந்தேன். குறிப்பு: திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி பாடல்.