உள்ளூர் செய்திகள்

வறுமை தீர்ப்பவள்

வானத் தமரர் பரவுமொருவடிவார் அமுதப் பைங்கிளியேவறுமைப் பிணிதீர் மருந்தீசர்மருவி அணைக்கும் சுடர்க்கொடியேமோனத் திருந்து தவம்புரியும்முனிவர் உளத்தில் அருளுருவாய்முகிழ்க்கும் துரிய மணமலரேமோகம் எழுப்பும் எழில்மதியேஞானத் துயரும் அறிஞர்தம் நலமார் இதயக்கோயிலிலேநடஞ் செய் திரிபுர சுந்தரியேஞாலம் புகழும் மாமயிலேகானம் வளரும் வான்மியூர் கண்ட மணியே வருகவேகலியில் என்னை உயர்த்திடுமோர் கனிவே வருக வருகவே மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களின் ஆத்மார்த்த தலம் சென்னையிலுள்ள திருவான்மியூர். இங்குள்ள சிவபெருமானை வால்மீகி பூஜித்தார் என்பதால் அவர் பெயரில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்தியரின் வயிற்று வலி நோயை இத்தல சிவபெருமான் குணப்படுத்தி அருளியதால் அவருக்கு மருந்தீசர் என்ற சிறப்பு உண்டு. காமதேனு, வேதங்கள், சூரியன், தேவார மூவர்கள், அப்பைய தீட்சிதர், மற்றும் பல்வேறு அருளாளர்களால் வழிபாடு செய்த தலம். அவர்களின் சிதம்பரம் என்னும் அடியாரால் பாடப்பெற்ற பாடல் இது. எந்த அம்பிகையின் சன்னதியின் முன் நின்று இப்பாடலை பாடினாலும் திரிபுர சுந்தரியின் அருள் கிடைக்கும்.