பிரசாதம் இது பிரமாதம் - அவல் உருண்டை
UPDATED : ஏப் 24, 2020 | ADDED : ஏப் 24, 2020
தேவையான பொருட்கள்அவல் - 200 கிராம்பொட்டுக்கடலை - 100 கிராம்சர்க்கரை - 1/4 கிலோநெய் - 200 கிராம்தேங்காய் - 1/4 மூடிஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்முந்திரிபருப்பு - 10செய்முறை: அவல், பொட்டுக்கடலையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து சன்னமாக இடித்து வைத்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிய துண்டுகளாக்கவும். சர்க்கரையை இடித்துச் சலித்து, கடலை மாவுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிபருப்பை வறுத்து எடுக்கவும். நெய்யை காய்ச்சி, மாவு, தேங்காய், முந்திரிபருப்பு, ஏலப்பொடியை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.