உள்ளூர் செய்திகள்

என்றும் பதினாறு

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும்கழுபிணியிலாத உடலும்சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்தவறாத சந்தானமும்தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்தடைகள் வாராத கொடையும்தொலையாத நிதியமும் கோணாத கோலுமொருதுன்பமில்லாத வாழ்வும்துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய்அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணிஅருள்வாமி! அபிராமியே!கல்வி, நீண்ட ஆயுள், கபடுஇல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான உத்தமகுணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை (அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் திருவடிமேல் வைக்கும் பக்தி, இந்தப் பதினாறும் இதற்கு அப்பால் உன் அடியார்களை என்றும் பிரியாத வரங்களை தர வேண்டும் அபிராமி தாயே என வேண்டி போற்றுகிறார் அபிராமி பட்டர்.