சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜன 27, 2015 | ADDED : ஜன 27, 2015
1. ராமன் இருக்குமிடத்தில் காமன்(மன்மதன்) இருப்பதில்லை என்று சொன்னவர்........கபீர்தாசர்2. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உபதேசித்தவர்........திருமூலர்3. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று வருந்தியவர்.......வள்ளலார்4. நாமார்க்கும் குடியல்லோம் என்று மன்னரிடம் வாதிட்டவர் .........திருநாவுக்கரசர்5. நலம் தரும் சொல் நாராயணன் என்று பாடியவர்..........திருமங்கையாழ்வார்6. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்ற சித்தர்....சிவ வாக்கியர்7. முருக நாமத்தை ஜெபித்த பெண் அடியவர்........முருகம்மையார்8. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்......பாம்பன் சுவாமிகள்9. குருவாய் வருவாய் என முருகனை அழைத்தவர்........அருணகிரிநாதர்10. முருகனிடம் இலக்கணம் கற்றவர்.....அகத்தியர்