இந்த வார ஸ்லோகம்
UPDATED : பிப் 23, 2018 | ADDED : பிப் 23, 2018
நமோ நம: காரண காரணாயஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய!கல்யாண ஸாந்த்ராய குணாகராயஸ்ரீ கும்பலிங்காய நம ஸிவாய!!(கும்பேஸ்வரர் ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: காரணங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பவரே! அமிர்த கலசத்தை தன் வடிவமாகக் கொண்டவரே! இனிமையே வடிவானவரே! நற்குணங்களின் இருப்பிடமானவரே! ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' என்ற பெயரால் அழைக்கப்படும் கும்பேஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்.