கணவரின் கவனத்திற்கு...
UPDATED : ஆக 25, 2023 | ADDED : ஆக 25, 2023
மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வயிற்றில் வளரும் குழந்தையின் நலனைக்கருதி, சில பழக்கங்களை கணவன் பின்பற்ற வேண்டும். இதற்கு கர்ப்ப தீக்ஷாநியமம் எனப்பெயர்.* மலை ஏறக்கூடாது. * கடலில் நீராடக்கூடாது. * சிராத்தம் செய்யும் வீட்டில் சாப்பிடக்கூடாது. த்விதீய கர்ப்பே ஸம்ப்ராப்தே பஞ்சமாஸாத் விஸர்ஜயேத்அந்யேது கர்ப்பே ஸம்ப்ராப்தே ஸப்த மாஸாத்விஸர்ஜயேத் என்கிறது கவுதம மஹரிஷியின் ஸ்ம்ருதி வாக்யம். அதாவது முதல் (குழந்தையின்) கர்ப்பத்துக்கு நான்காவது மாதம் முதலும், இரண்டாவது (குழந்தையின்) கர்ப்பத்துக்கு ஐந்தாவது மாதம் முதலிலும், இரண்டுக்கு மேற்பட்ட (குழந்தையின்) கர்ப்பங்களுக்கு ஏழாவது மாதம் முதலிலும் மேற்குறிப்பிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும்.