இப்படியும் ஒரு வியாபாரி
UPDATED : ஜூன் 21, 2019 | ADDED : ஜூன் 21, 2019
மகான் குருநானக் இளைஞராக இருந்த போது, தந்தை கல்யாண்தாஸ் மகனுக்கு புத்திமதி கூறினார். ''மகனே! வாழ்க்கைக்கு பணம் அவசியம் என்பதால் நீ விவசாயம் அல்லது வியாபாரத்தில் கவனம் செலுத்து'' என்றார். அதற்கு குருநானக், ''தந்தையே! விவசாயம், வியாபாரம் இரண்டும் முக்கியம் தான். என் உள்ளமே பண்பட்ட வயல். அதில் தியானம் என்னும் விதையை விதைத்து பாதுகாப்பேன். அப்போது தெய்வீகம் என்னும் பயிர்கள் விளையும். என் உடல் என்னும் கடையின் மூலம் மக்களுக்கு அருளை வழங்குவேன். அதனால் பேரானந்தம் என்னும் லாபம் கிடைக்கும்'' என்றார்.