உள்ளூர் செய்திகள்

எந்த குழந்தை வேண்டும்

குடும்பம் தழைக்க வாரிசு அவசியம். அதற்கு திருமணம் கட்டாயம். குழந்தை என்றதும் பெற்றோர் ஆண் குழந்தையை விரும்புவர். இது குறித்து காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.'ஆண் குழந்தையை பலரும் விரும்புவார்கள். ஏனென்றால் மகனே தந்தைக்கு அதிக கடமைகளைச் செய்கிறான். கடைசிக் காலத்தில் நற்கதியைப் பெற்றுத் தருகிறான். 'புத்' என்ற நரகத்திற்கு செல்லாமல் தடுப்பதால் ஆண் குழந்தைக்கு 'புத்திரன்' எனப் பெயர் வந்தது. அப்படியானால் பெண் குழந்தையை பெற்றவர்களின் நிலை என்னாகும்? பெண்ணுக்கு திருமணம் நடத்த பணம் செலவாகும். அதற்குப் பின்னும் தொடர்ந்து பெற்றோருக்கு செலவு ஏற்படும். இன்னொரு வீட்டில் வாழப் போகும் அவளுக்காக திருமணத்தன்று 'கன்யா தானம்' என்னும் நிகழ்வு நடக்கும். அதாவது மகளை தானம் கொடுக்க வேண்டும். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள் என்ன?21 தலைமுறைக்கு என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவதற்கும் (பாவம் செய்திருந்தாலும் நற்கதி அடைய), விஷ்ணு லோகத்தை அடைவதற்கும் இந்த தானம்(கன்யா தானம்) உதவி செய்கிறது. பெண்ணைப் பெற்றெடுத்து அவளை வேறு குடும்பத்தில் திருமணம் செய்து அதன் சந்ததி வளர உதவுவது என்றால் இந்த தானம் எவ்வளவு சிறந்தது பாருங்கள். 'புத்' என்ற நரகம் கிடைக்காமல் செய்கிறான் மகன்.ஆனால் பெண்ணைப் பெற்ற தந்தைக்கோ... அவருக்கு முன் வாழ்ந்த பத்து தலைமுறைகள்... பின்னால் வரும் பத்து தலைமுறைகள்... அவரையும் சேர்த்து 21 தலைமுறையினரும் விஷ்ணு லோகத்தை அடைய கன்யா தானம் உதவி செய்கிறது. பெண் குழந்தை பிறந்தால் எத்தனை புண்ணியம்....'தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆனால் அந்த தெய்வமே நேரில் வந்தால் அதுவே பெண் குழந்தை' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும். * குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து. * நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்