உள்ளூர் செய்திகள்

கடவுளை நம்பு

நதி எப்படி ஓடினாலும் கடைசியில் கடலில் தான் கலக்க வேண்டும். அது போல மனிதன் எந்த வழியைப் பின்பற்றினாலும் சேருமிடம் ஒன்றே என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.ஒரு ஊருக்குப் போனால் அங்கு செல்லும் இடத்திற்கு பல வழிகள் இருக்கும். நம்மை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பலவும் இருக்கும். நீங்கள் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினால் ஆட்டோ, டாக்சிகாரர்கள் 'என்னிடம் வாங்க' என ஓடி வருவர். சில நேரத்தில் அவர்களுக்குள் சண்டையும் வரலாம். இப்படி 'வைஷ்ணவம்தான் உயர்ந்தது. வைஷ்ணவ தீட்சை எடுக்க வேண்டும்' என்றும், 'சைவம் தான் உயர்ந்தது. சிவதீட்சை எடுக்க வேண்டும்' என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.இப்படி ஏன் சொல்கிறார்கள்? ஒரே ஒரு வழி மட்டும் இருந்தால் போதாதா? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு உணவின் ருசி பிடிக்கிறது. கடவுளை வழிபடுவதிலும் ஆளுக்கு ஆள் ருசி மாறுகிறது. அதனால்தான் அநேக வழிகள் உண்டாயின. தாங்கள் பின்பற்றுவது தான் உயர்ந்தது எனச் சொல்லி மற்றவர்களை தன் பக்கம் இழுக்கவும் செய்கிறார்கள். அது தேவையற்றது. ஒரு நதி மேற்கில் இருந்து கிழக்கே வருகிறது. இன்னொரு நதி கிழக்கில் இருந்து மேற்கே போகிறது. எந்தப் பக்கம் போனால் என்ன? முடிவில் எல்லாம் கடலில் தான் சங்கமிக்கப் போகிறது. ஒரு வழியில் போனால் குறிப்பிட்ட ஊருக்குப் போக நான்கு நாட்கள் ஆகலாம். இன்னொரு வழியில் போனால் ஆறு நாட்கள் ஆகலாம். இவ்வளவு தான் வித்தியாசம்... ஆனால் ஆகட்டுமே! எந்த வழியில் போகலாம் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஆனால் கடவுளை நம்புவது அவசியம். இந்த நம்பிக்கையுடன் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்ற அக்கறையை நம்மிடம் உண்டாக்குவதும் அவரே.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள். * மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள். * தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com