விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 19
மந்திரசித்தி அருளும் த்ரயாக்ஷர கணபதிசக்தியைப் பரம்பொருளாக வழிபடும் சாக்தசமயத்தில், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம் பீஜங்களும் த்ரயக்ஷரம் (மூன்று எழுத்துக்கள்) என்று போற்றப்படுவன.சாக்தப் பிரணவம் என்றும் அழைக்கப்படும். இவற்றில், ஐம் - சரஸ்வதி தே பராசக்தியையும், ஸ்ரீம் - லட்சுமி தேவியையும் குறிப்பன. 'ஸசாமர ரமாவா சேவிதா' என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியைப் போற்றுகிறது. சரஸ் இருபுறமும் இருந்து சாமரம் வீச, நடுவில் லலிதாம்பிகை எழுந்தருளி நாமாவளி உணர்த்துகிறது. அதேபோல், சரஸ்வதி, லட்சுமியின் பீஜங்கள் | நடுவில் பராசக்தியின் பீஜம் உள்ளது. இம்மூன்று பீஜங்களின் ஒரே வடிவ எழுந்தருளியிருக்கிறார் என்பது இதன் பொருள்.தியான சுலோகம்கஜேந்த்ர வதநம் ஸாக்ஷாத் சலத்கர்ண ஸுசாமரம் |ஹேமவர்ணம் சதுர்பாஹும் பாசாங்குசதரம் வரம் ||ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் ததா' |புஷ்கரே மோத'கஞ்சைவ தா'ரயந்தம் அநு ஸ்மரேத் IIஸாக்ஷாத் க ஜேந்த்ர வத நம் - கண்ணால் காணும் வகையில் உள்ள யானையின் முகம் போன்ற முகத்தைக் கொண்டவராகவும்சலத்கர்ண ஸுசாமரம் - சாமரம் போன்று அசைகின்ற இருபெரு கொண்டவராகவும்ஹேமவர்ணம் - பொன்னிறத் திருமேனியை உடையவரசதுர்பாஹும் - நான்கு திருக்கரங்களை உடையவராகவும்பாச அங்குச தரம் - பாசம், அங்குசங்களை தம் பின்னிரு கைகளில் ஏந்தியவராகவும்வரம் - வரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் சிறந்து விளங்கும் வரதராகவும்தக்ஷிணே ஹஸ்தே - வலது கையில்ஸ்வதந்தம்- தனது ஒடித்த தந்தத்தை ஏந்தியவராகவும்ஸவ்யே து - இடது முன்கையிலோஆம்ரபலம் - மாம்பழத்தை வைத்திருப்பவராகவும்ததா - அவ்வாறே தனது ஐந்தாவது கரமானபுஷ்கரே - துதிக்கையில்மோத கஞ்சைவ - மோதகத்தையும்தாரயந்தம் - ஏந்தியிருப்பவராகவும் உள்ள த்ரயக்ஷர கணஅநுஸ்மரேத் - நினைக்க வேண்டும்.பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையையும் ஆயுதமாக ஏந்தியதால் மனஉறுதியையும் கொண்டு, செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவதுஅங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.மாம்பழம்: இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.மோதகம்: இனிப்பானது. உயிர்களுக்கு நிரந்தர இன்பமான வீடுபேற்றைத் தருபவர் கணபதி என்பதை உணர்த்துவது.பலன்: சர்வ மந்திர சித்தி, விரும்பிய பயன் கிடைக்கும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்