விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 24
அதர்மங்களை அழிக்கும் உத்தண்ட கணபதிஉத்தண்டம் என்ற சொல்லுக்கு வீரம், உக்கிரம், மிகுந்த வலிமை என்று அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதால் இவருக்கு 'உத்தண் என்று பெயர். அறம், பொருள், இன்பம் எனும் மூன்று இம்மைப் பேறுகளையும் திசைகளையும் குறிக்கும் வகையில், பத்துக் கைகளோடும் தேவியோடும் எழுந்தருளியிருப்பவர்.தியான சுலோகம்கல்ஹாராம்புஜ பீஜபூர கதா தந்தேக்ஷு சாபம் சுமம் பிப்ராணோ மணிகும்ப சாலி கிணிசம் பாசம் ஸ்ருணிஞ் சாப்ஜகம் Iகௌராங்க்யா ருசிராரவிந்த கரயா தேவ்யா ஸமாலிங்கித:சோணாங்கஸ் சுப மாதநோது பஜதாம் உத்தண்ட விக்னேச்வர: IIகல்ஹாராம்புஜ - கருங்குவளை மலர்பீஜபூர - மாதுளங்கனிகதா - கதை எனும் ஆயுதம்தந்த - தனது ஒடித்த தந்தம்இக்ஷு சாப - கரும்பு வில் சுமம் - மலர்க்கணைமணிகும்ப - ரத்ன கும்பம்சாலிகிணிசம் - நெற்கதிர் கொத்துபாசம் - பாசம் எனும் ஆயுதும்ஸ்ருணிம் - அங்குச ஆயுதம்அப்ஜகம் - தாமரை (ஆகியவற்றை)பிப்ராண: - தாங்கியிருப்பவரும்சோணாங்க: - சிவந்த நிறத் திருமேனியரும்ருசிராரவிந்த கரயா - அழகான தாமரையைப் பிடித்த கையினளும்கௌராங்க்யா - வெண்ணிறத்தவளும் (தனது)தேவ்யா - தேவியால்ஸமாலிங்கி த: - தழுவப்பட்டவரானஉத்தண்ட விக்னேச்வர: - உத்தண்ட கணபதிஎனப்படுபவர்பஜதாம் - வணங்குபவர்களுக்குசுபம் - நன்மையையேஆதநோது - செய்யட்டும்.நீலோத்பலம்: கருங்குவளை. அம்பிகை ஏந்தியுள்ள மலர். இறைவனின் ஐந்தொழில்களில் படைத்தலைக் குறிப்பது.ரத்தின கும்பம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.மாதுளங்கனி: பிறவிப்பிணியைப் போக்கவல்ல இறைவன் கணபதியே என்பதை விதைமிகுந்த இக்கனி உணர்த்துகிறது.நெற்கதிர்: பயிர் வளத்தைக் குறிப்பது. அடியார்களின் ஆரோக்கியத்தைக் காப்பவர் கணபதி என்பதைக் காட்டுவது.கதை: இது பிடிக்கும் தண்டமும் உருண்டையான கனமான முனைத் தலைப் பகுதியும் சேர்ந்த ஆயுதம்.பாசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம்.அங்குசம்: புலனடக்கத்தையும் ஆணவ மல நீக்கத்தையும் குறிப்பது அங்குசம்.ஒடித்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.கரும்புவில், மலர்க்கணை: மன்மதனின் ஆயுதங்கள். உயிர்களுக்கு விருப்பமானவற்றை அருள்பவர் கணபதியே என்பதைக் காட்டுவன.தாமரை: ஞானத்தையும் சூரியனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் குறிப்பது.தேவி: விநாயகப் பெருமானின் திருவருள். அதாவது சக்தி. இருவரும் பிரிக்க முடியாதவர்கள்.பலன்: செயலில் வீரம் பெருகும்; உடலில் வலிமை கிடைக்கும்; இல்லறம் சிறக்கும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்