உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 25

பிறவிக் கடனை நீக்கும் ருணமோசந கணபதிருநணம் என்ற சொல்லுக்கு 'பிறவிக் கடன்' என்று பொருள். மனிதனாகப் பிறந்தவன், தேவகடன், பித்ரு கடன், ரிஷிகடன் ஆகிய மூன்று கடன்களையும் கடமைப்பட்டவன். அவற்றை நிறைவேற்றாதவன் மேற்கண்ட மூவரின் சாபத்திற்கும் ஆளாவான். அந்த சாபத்தை நீக்கி அருள் செய்பவர் இந்தக் கணபதி.தியான சுலோகம்பாசாங்குசௌ தந்த ஜம்பூ ததாநஸ் ஸ்படிக ப்ரப: Iரக்தாம்சுகோ கணபதிர்முதே ஸ்யாத் ருணமோசக: IIபாசாங்குச - பாசம், அங்குசம் எனும் ஆயுதங்களையும்தந்த - தனது ஒடித்த தந்தத்தையும்ஜம்பூ - நாவல் பழத்தையும்ததாந: - தம் கைகளில் ஏந்தியிருப்பவரும்ஸ்படிகப்ரப: - வெண்ணிறத் திருமேனியரும்ரக்த அம்சக: - செந்நிறப் பட்டாடையை அணிந்திருப்பவரும் ஆனருணமோசக: கணபதி - பிறவிக் கடனில் இருந்து நம்மை விடுவிப்பவரான கணபதியானவர்முதே - மகிழ்ச்சியை அளிப்பதன் பொருட்டுஸ்யாத் - விளங்குபவராகுக.பாசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம்.ஒடித்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.அங்குசம்: புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்.நாவல் பழம்: உடல் நலனையும் தவ சித்தியையும் உணர்த்துவது.பலன்: பிறவித்துயர் நீக்கம், உள்ளத் தெளிவு, புனிதநிலை அடைதல்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்