அதிகாலை... சுபவேளை...
பிரபல பாடகரான மதுரை மணி ஐயர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது. ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகள் சென்னையில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் அதிகாலை 5:30 மணிக்கு மணி ஐயர் வீட்டிற்கு, தகவல் கொடுக்காமல் சென்றார் மகாசுவாமிகள். சங்கீத ரசிகரான சுவாமிகளுக்கு எப்போதும் மணி ஐயரின் பாடல்களைக் கேட்பதில் அலாதி ஈடுபாடு. அந்த நேரத்தில் கண்களை மூடியபடி சாதகத்தில் ஈடுபட்டார். அதாவது தன்னைச் சுற்றி நடப்பதையே அறியாமல் அவர் ஆர்வமுடன் பாடிக் கொண்டிருந்தார். மகாசுவாமிகள் வந்திருக்கும் விஷயத்தை குடும்பத்தினர் ஒருவர், மணி ஐயர் காதில் விழும்படி உரக்கத் தெரிவித்தார். திகைப்புடன் கண் திறந்தவர், மகாசுவாமிகள் கண் முன் நிற்பதை கண்டு படபடத்தார்.மேலும் சுவாமிகள் அவரிடம், ''ஒரு பாட்டுப் பாடு'' என்றார். மணிஐயருக்கு தர்ம சங்கடமானது. இன்னும் குளிக்கக் கூடவில்லை! கடவுளுக்கு நிகரான சுவாமிகள் முன்பு, உடல் துாய்மை இல்லாமல் எப்படி பாடுவது? என தயங்கினார். . ''எப்போதும் சங்கீதக் கடலில் நீந்துபவன் நீ. அதனால் எப்போதும் துாய்மையாகவே இருக்கிறாய். இப்போது பாடுவதற்காக நீ குளிக்க வேண்டிய அவசியமில்லை!”நெகிழ்ந்து போன மணிஐயர், 'பரமேஸ்வரா...' என்று கூவியபடி சுவாமிகளை விழுந்து வணங்கினார்.“பாடு!” என ஆசியளித்தார் சுவாமிகள். ''சுவாமி...மிருதங்கம் வாசிப்பவர் இப்போது தான் வீட்டுக்குப் போனார். தாளம் இல்லாமல் நான் எப்படி பாடுவது?” எனக் கேட்டார். “கவலை வேண்டாம். நான் இருக்கிறேன்'' என்ற சுவாமிகள் கைகளால் தாளமிட தொடங்கினார். பரவசத்தால் கண்ணீர் பெருக, அம்பாள் பற்றிய கீர்த்தனைகளை ராகத்துடன் பாடினார் மணிஐயர். அந்த அதிகாலையில் இனிய கச்சேரி சுவாமிகள் முன் நடந்தது.திருப்பூர் கிருஷ்ணன்உபதேசங்கள்* நாடு நலம் பெற பசுக்களைக் காப்போம்.* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற...இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!