உள்ளூர் செய்திகள்

"பூக்"கல்

மதுராவிற்கு ஒருமுறை மகரிஷி தயானந்தர் சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அவர் மேடையில் ஏறியதும், சிலர் அவர் மீது சரமாரியாக கற்களை வீசினர். அவற்றில் பல அவர் மேல் விழுந்தன.இதற்காக மகரிஷி கோபப்படவும் இல்லை, அங்கிருந்து நகரவுமில்லை. புன்முறுவலுடன் வலியைத் தாங்கிக் கொண்டு, ''என் சொற்பொழிவைக் கேட்க வருகிற அவசரத்தில் பலருக்கு பூக்கள் கிடைக்கவில்லை போலும்! அதனால் தான் பூக்கள் 'பூ'க்'கல்'லாக மாறி விட்டனவோ!'' என்று சொல்லி சிரித்தார். அத்துடன் கல் எறிந்தவர்களின் அன்புக்கு கட்டுப்படுவதாகவும் கூறினார்.இதைக் கேட்டு கல் எறிந்தவர்கள் அவமானப்பட்டு போனார்கள்.''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்து விடல்'' என்ற குறளுக்கேற்ப நடந்து கொண்டார் மகரிஷி.