உள்ளூர் செய்திகள்

பாத காணிக்கை

காஞ்சிபுரம் மடத்தில் தொண்டராக பணிசெய்தவர் ராமகிருஷ்ண அய்யர். இவரது மருமகனான பார்த்தசாரதி, மனைவியுடன் நாக்பூரில் இருந்து காஞ்சிபுரம் வந்திருந்தார். காஞ்சி மஹாபெரியவரை தரிசித்து விட்டு நாக்பூருக்குப் புறப்பட்டார். வழியனுப்பி வைக்க மகன் கணேஷும், பார்த்தசாரதியின் தம்பியும் வந்தனர். 'வான நாடனே வழித்துணை மருந்தே' என்னும் தேவாரப் பதிகத்தை ஒரு தாளில் எழுதி பெற்றோரிடம் கொடுத்தார் கணேஷ். ரயில் புறப்பட்டதும் பயணச்சீட்டு தன்னிடம் இருப்பதைக் கண்டு பதறினார் கணேஷ். சித்தப்பா ஒரு ரயில்வே ஊழியர் என்பதால், உடனடியாக அதிகாரியிடம் தெரிவித்தார். ரயில் அடுத்து நிற்கப் போகும் விஜயவாடா ரயில் நிலையத்திற்கு 'ஜிம்லெட்' என்னும் முறையில் பயணச்சீட்டை அனுப்புவதாக அதிகாரியும் கூறினார். இதற்கிடையில் டிக்கட் பரிசோதகர் வரவே, பார்த்தசாரதி நடந்ததைச் சொல்லி வருந்தினார். ''கவலைப்பட வேண்டாம். உங்கள் தம்பி ரயில்வே ஊழியராக இருப்பதால் அவருக்கு 'ஜிம்லெட் புரொசிஜர்' தெரிந்திருக்கும். அதனால் விஜயவாடாவில் செக் செய்து கொள்ளலாம், அங்கும் டிக்கட் குறித்த தகவல் வராவிட்டால் பயணக் கட்டணத்தைச் செலுத்துங்கள்'' என்றார். பார்த்தசாரதியின் மனைவி காஞ்சி மஹாபெரியவரை வேண்டியதோடு, மகன் கொடுத்த தேவார பதிகத்தையும் படித்தார். ரயில் விஜயவாடாவை அடைந்ததும் அங்குள்ள அதிகாரியிடம் விசாரித்த போது சென்னையில் இருந்து தகவல் ஏதும் வரவில்லை என்றார். இதனால் பணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லாததால் பார்த்தசாரதி, சகபயணி யாரிடமாவது வாங்கி செலுத்தலாம் என எண்ணி அருகில் இருந்தவரிடம் உதவி கேட்க அவரும் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் 'ஜிம்லெட்' மெசேஜ் அனுப்பாததால் தான் கட்டணம் செலுத்த நேர்ந்ததை புகாராக கொடுத்தார் பார்த்தசாரதி. இரண்டு மாதம் கழித்து பணமும் திரும்ப கிடைத்தது. அதை மஹாபெரியவருக்கு பாதகாணிக்கையாக்கினார்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com