சனீஸ்வரரை எதிர்த்த மன்னர்
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
ஒருமுறை நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருந்தார். இதனால் நாட்டில் கடும்பஞ்சம் உருவாகும் என்பதை ஜோதிடர்கள் மூலம் அறிந்த தசரதர் தேர் மீதேறி சனீஸ்வரனுடன் போர் செய்ய புறப்பட்டார். சூரிய மண்டலத்திற்கு மேலே இருக்கும் நட்சத்திர மண்டலத்தை அடைந்தார். அவரைக் கண்ட சனீஸ்வரர், ''உலக நன்மைக்காக என்னிடம் போரிட வந்த தசரதரே... பாராட்டுகிறேன்'' என்றார்.''சனீஸ்வரரே! நாடெங்கும் செழிக்க மழை பெய்யட்டும். தாங்கள் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதை தடுப்பதே எனது எண்ணம்'' என்று சொல்லி சனீஸ்வரர் மீது ஸ்தோத்திரம் பாடினார். மனம் குளிர்ந்த சனியும் அவரது வேண்டுகோளை ஏற்றார்.