கண்ணனை நினை மனமே!
துறவியிடம் ஆசி பெற வந்த பக்தர் ஒருவர்,''சுவாமி! எனக்கு ஆயிரம் பிரச்னைகள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. மனைவிக்கு நீண்ட நாளாக உடல்நலம் இல்லை. எனக்கு வழிகாட்டுங்கள்'' எனக் கேட்டார்.''மகனே! இது உன் விதிப்பயன். பக்திக்கு, மிஞ்சிய பரிகாரம் இல்லை. பகவான் கண்ணனின் மந்திரமான 'ஓம் கிருஷ்ணாய நம' என்பதை மனதார ஜபித்து வா! கஷ்டம் தீரும்'' என்றார் துறவி.''விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்னும் போது பகவான் திருநாமத்தை சொல்வதால் பலன் கிடைக்குமா?''.சிரித்த துறவி, ''மகனே! மகாவிஷ்ணு இந்த பூமியில் தசாவதாரம் எடுத்தார். அவர் நினைத்தால் நொடிப்பொழுதில் உலகத்தை மாற்றி இருக்கலாமே! அதர்மத்துடன் நடக்கும் போராட்டத்தின் இறுதியில் தர்மத்தை வெல்லச் செய்வதும், விதியின் வலிமையை நமக்கு உணர்த்தவே! காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டால் உடம்பு சீராவது போல தான் விதியின் பாதையும். அதை யாராலும் மாற்ற முடியாது. அதன் கடுமையை குறைக்க பக்தியில் நாம் ஈடுபடுகிறோம்'' என்றார்.