உள்ளூர் செய்திகள்

வேண்டாமே கொம்பு

ஒருமுறை சிவ தரிசனத்திற்காக கைலாயம் வந்தார் பிரம்மா. ஞான பண்டிதரான முருகன் வழியில் நின்றிருந்தார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல பிரம்மா உள்ளே சென்றார். முருகன் கண்டுகொள்ளவோ, அவரைத் தண்டிக்கவோ விரும்பவில்லை. சிறிது நேரத்தில் சிவ தரிசனம் முடித்து பிரம்மா திரும்பினார். அப்போதும் அவருக்கு 'நான்' என்னும் ஆணவம் நீங்கவில்லை. பிரம்மாவை சிறை பிடித்தார் முருகன். அதற்கான காரணத்தை சிவன் கேட்ட போது, “தந்தையே! உம்மைத் தரிசிக்கும் முன்பு ஆணவம் இருந்தது. தங்களை தரிசித்த பின்னும் ஆணவம் நீங்க வில்லை. அதனால் சிறை பிடித்தேன்” என்றார். ஆணவத்தைப் போக்கவே கோயிலில் கொடிமரத்தின் முன் பலிபீடம் உள்ளது. அங்கு 'நான்' என்னும் 'கொம்பு' முளைக்காமல் இருக்க வேண்டும் என வழிபடுவது அவசியம்.