உள்ளூர் செய்திகள்

லாபமோ லாபம்

ஷீரடிபாபா அடியவர்களிடம் தட்சணையாகப் பணம் கேட்பது வழக்கம். ''துறவியான பாபாவுக்கு பணம் ஏன் தேவைப்படுகிறது?'' என பலர் சந்தேகப்பட்டனர். ''தாராளமாக பணம் கொடுங்கள். உங்களிடமுள்ள தீயகுணம் மறையும். மனம் துாய்மை பெறும்''என்றார் பாபா. ஒருமுறை காமம், கோபம், பேராசை, பொறாமை, சூது, கஞ்சத்தனம் என்னும் ஆறு பகைவர்களையும் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக தர்கட் என்ற பெண்ணிடம் ஆறு ரூபாய் தட்சணை கேட்டார் பாபா. “என்னிடம் பாபா தட்சணை கேட்டதால் பணப்பை காலியானது. பிற்காலத்தில் அதுவே பல மடங்காகப் பெருகி, திரும்ப என்னிடம் வந்தது” என்கிறார் கணபதிராவ் போடஸ்.