மனதை ஒருமுகப்படுத்து!
UPDATED : ஆக 22, 2016 | ADDED : ஆக 22, 2016
* மனம் ஓரிடத்தில் நிற்காது. அது உழன்று கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது. தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணர்ந்தால் ஆணவம் அகன்று விடும்.* நல்ல மனம், கெட்ட மனம் என்று உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.* ஒருவர் தன்னை பலமற்றவர் என்றோ, கெட்டவர் என்றோ ஒருபோதும் நினைப்பது கூடாது.- ரமணர்