உண்மையை உணர்ந்திடு!
UPDATED : நவ 22, 2015 | ADDED : நவ 22, 2015
* உண்மையில் நாம் கடவுளின் சிறு கருவியே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை அற்றுப் போகும்.* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக மட்டும் இருப்பது கூடாது. இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும்.* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை இடைவிடாத தியானப் பயிற்சியால் வசப்படுத்த முடியும்.*விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைத்து நிற்கும்.* நான் யார் என்ற கேள்வியைக் உன்னிடம் கேட்டுக் கொள். வழி புலப்படுவதைக் காண்பாய்.-ரமணர்