உள்ளூர் செய்திகள்

உனக்குள் ஒளிந்த தெய்வீகம்

* எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று எண்ணுகிறோம். உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் 'நான்' என்ற அகந்தை தானாக விலகிவிடும்.* பிறர் விஷயங்களில் ஈடுபடுத்தி மனதை அலைபாய விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பு காட்டுவதும் கூடாது.* இரண்டு வித மனங்கள் இல்லை. அது ஒன்று தான். நல்ல எண்ணங்களைச் சிந்தித்தால் அது நல்லமனம். தீய எண்ணங்களைப் பற்றிக் கொண்டால் அது கெட்டமனம். * நான் பலமற்றவன், தீயவன் என்று நினைப்பது தான், நாம் செய்யும் பெரிய தவறு. இந்தத் தவறை இனியும் செய்யாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் நிறைந்திருக்கிறது.* உள்மனதில் நிலையான அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ, அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள். - ரமணர்