காலமறிந்து செயல்படு!
UPDATED : ஜன 10, 2016 | ADDED : ஜன 10, 2016
* காலம் விரைந்தோடுகிறது. அது யாருக்கும் காத்திருப்பதில்லை எந்த செயலையும் அதற்குரிய நேரத்தில் செய்து முடியுங்கள்.* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள். பாவம் செய்ய பயந்து விடு . இதுவே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.* வேண்டியவன், வேண்டாதவன் என்று யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை.* மனதில் நேர்மையும், தூய பக்தியும் இருந்தால் உனக்குத் தேவையான அனைத்தும் கடவுளின் அருளால் கிடைக்கும்.-சாய்பாபா