மகிழ்ச்சிக்கான டானிக்
UPDATED : ஏப் 19, 2024 | ADDED : ஏப் 19, 2024
* எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுங்கள். மனதில் சோர்வின் சாயல் படிவதை அனுமதிக்க வேண்டாம்.* மகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவுவதே சொர்க்கம். உள்ளத்திற்கு எழுச்சி தரும் டானிக் இந்த மகிழ்ச்சி மட்டுமே.* நல்லவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அவர்கள் சொல்லும் இனிய மொழிகள் உயர்வுக்கு வழிவகுக்கும்.* பக்தி என்பது உணவில் இடம் பெறும் ஊறுகாய் அல்ல. அதுவே ஆரோக்கியம் தரும் சத்தான உணவு. * கடவுள் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்பினால், மனத்தூய்மையும், ஒழுக்கமும் வந்து விடும். - சாய்பாபா