விரதத்தை விட மேலானது
UPDATED : பிப் 12, 2016 | ADDED : பிப் 12, 2016
* உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.* ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒரு அரிய செயலைச் செய்வது சிறப்பானது.* செருக்கு இல்லாத செல்வந்தன் குற்றம் இல்லாத நிலவு போல பிரகாசத்துடன் வாழ்வான்.* புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.*பொருள் இல்லாதவனை ஏழை என்று கருத வேண்டாம். ஆசை அதிகம் இருப்பவனே எப்போதும் ஏழையாக வாழ்கிறான்.-சாய்பாபா