அன்பே பாதுகாப்பான முதலீடு
UPDATED : ஜூலை 20, 2016 | ADDED : ஜூலை 20, 2016
* அன்பே பாதுகாப்பான முதலீடு. அதை வாழ்வில் முதலீடு செய்பவன் வட்டியோடு திரும்பப் பெறுவான்.* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்குச் செய்ய வேண்டும்.* ரோஜாவின் அழகையும், மணத்தையும் காண்பவன் அறிவாளி.* சொல்வது என்பது யாருக்கும் எளிதானது. ஆனால் சொல்லியதை கடைபிடிப்பது மிகவும் கடினம்.* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலைச் செய்வது உயர்வானது.- சாய்பாபா