உள்ளூர் செய்திகள்

தர்மம் நிலைக்க வழி

* உண்மையாக நடந்தால் தான் உலகில் தர்மம் நிலைக்கும்.* பசியுடன் விரதம் இருப்பதை விட, ஏழை ஒருவனுக்கு விருந்து அளிப்பது மேலானது.* சொல்வது யாருக்கும் எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினமானது.* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடுவது சிறந்தது.* காரணமின்றி கடவுள் எதையும் படைப்பதில்லை. உலகிலுள்ள அனைத்தும் மதிப்பு மிக்கவை.* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மகிழ்ச்சி.- சாய்பாபா