உள்ளூர் செய்திகள்

தர்மம் என்றும் காக்கும்

* உடல் என்னும் கருவியைச் செம்மையாக வைத்திருக்க உணவு, உடையை தூய்மையாக வைத்திருங்கள்.* மனம் என்னும் கருவியைத் தூய்மையாக்க எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள்.* முற்பிறவியின் பயனாக நம்மைத் தொடரும் பாவச்சுமையை, இன்றைய வாழ்வின் நற்செயல்களால் மட்டுமே போக்க முடியும். * நாம் கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், நம் தந்தையான கடவுளின் அன்புப் பிணைப்பை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். * பயணம் செய்யும் போது வெறுமனே வேடிக்கை பார்க்காதீர்கள். கடவுளின் திருநாமத்தை ஜெபித்துக் கொண்டிருங்கள். * செல்வம், அதிகாரம், ஆடம்பரம் ஆகியவை ஒருநாள் நம்மை விட்டுக் காணாமல் போய்விடும். ஆனால், செய்த தர்மமோ என்றும் அழியாமல் நம்மைக் காக்கும்.* சமைக்கப்பட்ட பிறகு எரிபொருள் தேவையில்லை. அதுபோல, வாழ்வின் உண்மையை உணர்ந்தவனுக்கு ஆன்மிகப் பயிற்சிகள் தேவைப்படுவதில்லை. - சாய்பாபா