தவறாகப் பேச வேண்டாம்
UPDATED : டிச 20, 2016 | ADDED : டிச 20, 2016
* யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள நற்பண்புகளை பற்றி மட்டுமே பேசுங்கள்.* மனம் கனிந்த அன்பு இருக்குமிடமே கடவுளின் இருப்பிடம். ஆழ்ந்த பக்தியால் மட்டுமே இதை அடைய முடியும்.* வழிபாடு என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாக இருக்க வேண்டும்.* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுால் வழிகாட்டியபடி வாழ்வது மேலானது.- சாய்பாபா