நேர்வழியில் சம்பாதியுங்கள்!
UPDATED : ஜன 30, 2014 | ADDED : ஜன 30, 2014
* பிஞ்சு உள்ளத்திலேயே அன்பை விதைத்து விட வேண்டும். அதனால், ஒற்றுமை மனப்பான்மை உருவாகும்.* குறுக்கு வழியில் வந்த பணம் தங்காது. நேர்வழி சம்பாத்தியமே நிலைக்கும்.* எளிய உணவை அளவாக உண்ணுங்கள். இனிய மொழிகளை அளவாகப் பேசுங்கள்.* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், கருணை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொண்டால் போதும். சொர்க்கம் நம்மைத் தேடி வரும். * 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்குக் கொடு' என்று கடவுளை வேண்டுங்கள். - சாய்பாபா