எளிமையாக சாப்பிடுங்க!
UPDATED : ஜன 04, 2013 | ADDED : ஜன 04, 2013
* மவுனம் உன்னதமானது. அறவே பேச்சை நிறுத்தி விட்டு எண்ண ஓட்டத்தை உள்ளே திருப்புங்கள் * அமைதியை வெளியே தேடாதீர்கள். அது நமக்குள்ளே தான் இருக்கிறது. * நல்ல விஷயங்கள் விலை மதிப்பில்லாதது. அதனால், அதைப் பின்பற்றுபவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள்.* எளிய உணவைச் சாப்பிடுங்கள். உடலும் உள்ளமும் உங்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கும். * கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே ஒழிய, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.* ஆன்மிக வாழ்வில் இலக்கை அடைய வேண்டும் எனில், சரியான சாஸ்திர அறிவும், சாதனை வழிகளும் மிகவும் அவசியம்.* நல்லொழுக்கம், நல்ல செயல், நற்சாட்சியே கடவுள் நெறி.* கடந்த கால நினைவுகளை சுமந்து கொண்டு திரியாதீர்கள். அவை உங்களை அழுத்தி இன்றைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும்.- சாய்பாபா