உள்ளூர் செய்திகள்

மறப்போம்.. மன்னிப்போம்!

*பிறர் குறையை பெருந்தன்மையுடன் மறக்க, மன்னிக்க முயலுங்கள். *இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை. *கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் வினாடிநேரத்தையும் வீணாக்கக் கூடாது. *கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான். *கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் சமுதாயம், விலங்குகள் வாழும் காடாக மாறும்.- சாய்பாபா