இன்றே தொடங்குங்கள்
UPDATED : மார் 06, 2017 | ADDED : மார் 06, 2017
* நாளை என்பது நம் கையில் இல்லை. நல்லதைச் செய்ய நினைத்தால் இன்றே தொடங்குவது நல்லது.* உதட்டளவில் வெளிப்படுவது அன்பு ஆகாது. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அது வெளிப்பட வேண்டும்.* மணம் மிக்க மலர்களை விட, நல்ல எண்ணம் என்னும் மலர்களால் கடவுளை வழிபடுவது சிறந்தது.* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட, வாழ்வில் ஒரு நல்ல விஷயத்தைப் பின்பற்றுவது மேலானது.- சாய்பாபா