உள்ளூர் செய்திகள்

நல்ல நட்பே சிறந்த துணை

* நல்லவர் நட்பை விட சிறந்த துணை வேறில்லை. நேர்மையாக நடப்பதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை. * விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது. * நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு. * எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். உனக்குத் தகுதியானது எதுவோ அது சமயத்தில் கிடைக்கும். சாய்பாபா