சொர்க்கம் நம் கையில்!
* கைகளின் அழகு, அதில் அணியும் வளையல்களிலும், ஆபரணங்களிலும் இல்லை. மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.* தனித்து வாழாதீர்கள். அண்டை வீட்டாரிடம் ஒதுங்கி இருக்காதீர்கள்.* கடவுளை எழுப்புவதற்காகக் காலையில் சுப்ரபாதம் பாடுவதில்லை. அறியாமையில் இருந்து மனிதன் எழவே பாடப்படுகிறது. * மனதைச் சமநிலையில் வைத்திருக்க, நல்ல பழக்கங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள். * மற்றவர் பேசும் பழிச்சொல்லையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாதீர்கள். இறுதியில் வெற்றி உங்களுக்கே. * எப்போதும் கடவுளிடம் மனஅமைதியைத் தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். இதுவே சுகமான, நியாயமான வழிபாடு. * சொர்க்கத்தை யாரும் தேடிப் போக வேண்டியதுஇல்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்ல ஒழுக்கம், தூய சிந்தனை இருந்துவிட்டால் சொர்க்கம் கைக்குள் வந்துவிடும்.- சாய்பாபா