உள்ளம் பக்குவமாகட்டும்!
UPDATED : ஜூலை 10, 2014 | ADDED : ஜூலை 10, 2014
* வருங்காலத்தை எண்ணிக் கனவு காண்பதை விட நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே சிறந்தது.* 'நானே எஜமானன்' என நினைத்தால் அகந்தை வந்து விடும். 'கடவுளே எஜமானன்' எனக் கருதினால் பிறவிப்பயன் கிடைத்து விடும். * தினமும் நீராடுவதால் உடல் மட்டுமே சுத்தமாகிறது. சுயநலமற்ற சேவையில் தான், மனம் சுத்தமாகிறது.* முற்றிய தேங்காய் கடவுளுக்கு நைவேத்யமாவது போல, உள்ளத்தால் பக்குவம் அடைந்தவனே கடவுளுக்கு பிரியமானவன்.- சாய்பாபா