உள்ளூர் செய்திகள்

நல்லதைக் கற்போம்

* உலகம் ஒரு பல்கலைக்கழகம். அதில் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள்.* உடல் என்னும் கோவிலில் கடவுளை அமர்த்த எண்ணம், சொல், செயலால் தூய்மையாக இருக்க வேண்டும்.* இரவும் பகலும் போல மனித வாழ்வில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.* உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோம் எனக் கருதக்கூடாது.- சாய்பாபா