உள்ளூர் செய்திகள்

நல்லவனாக வாழ்வோம்

* இசைத்தட்டில் ஊசியை வைத்தால் தான் பாட்டு கேட்கிறது. சரியான அலைவரிசையில் ரேடியோவை வைத்தால் தான் இசை கேட்கிறது. கடவுளிடம் மனத்தை ஒருமுகமாகத் திருப்பி ஈடுபடுத்தினால் தான் நமக்கு ஆத்மாவின் இனிய இசை கேட்கும். இதைச் செய்வதற்கு மிக எளிய வழி பஜனையாகும். ஒவ்வொருவரும் பஜனை செய்யச் செய்ய இந்த ஈடுபாடு வலுப்படுகிறது.* அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரமாகும். நித்திரைக்குப் பிறகு மனமும் கர்மேந்திரியங்களும் அந்த வேளையில் அமைதியாக இருக்கின்றன. அப்போது சத்வகுணம் ஓங்கி இருக்கிறது. இந்த வேளையில் சொல்லும் தியான ஸ்லோகங்களே அதிக பலன் தர முடியும். நம்மிடத்தில் அமைதியும், நம்மைச் சுற்றிஅமைதியும் நிறைந்துள்ள அந்த வேளை தான் தியானத்துக்கு மிகவும் ஏற்றது.* நாக்கு கூர்மையான பற்களுக்கு இடையே கடிபடாமலும், காயம் படாமலும் மிகவும் லாவகமாகச் செயல்படுகிறது. அதுபோல் தீயசக்திகளும் தீமைகளும் மலிந்த இவ்வுலகில் நீங்கள் நல்லவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.-சாய்பாபா