மனநிறைவுடன் வாழ்வோம்
UPDATED : ஏப் 11, 2017 | ADDED : ஏப் 11, 2017
* கல் துாணை பனித்துளியால் கரைக்க முடியாதது போல, நல்லவர் பெருமை, கீழானவர்களின் பழிச்சொற்களால் குறைவதில்லை.* உடல் நலம் இல்லாதவன் உண்ண விரும்புவதில்லை. மன நலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி கொள்வதில்லை.* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே நிறைவான மகிழ்ச்சி. கருணையே சிறந்த புண்ணியம்.* கடவுள் காரணம் இல்லாமல் எதையும் படைப்பது இல்லை. உன்னையும், என்னையும் கூட அர்த்தமுடனே உலகில் படைத்திருக்கிறான்.- சாய்பாபா